Categories
தேசிய செய்திகள்

உங்க போட்டோவ பாத்தேன்… ரொம்ப அழகா இருக்கீங்க… திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்..!!

திருமண இணையதளத்தில் பார்த்து பிடித்ததாக கூறி 10 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

பெங்களூரை சேர்ந்த சாரா என்பவர் தனது பெற்றோர் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்த நிலையில் தனது புகைப்படம் மற்றும் தன்னைப் பற்றிய சில தகவல்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சாராவின் தொலைபேசி எண்ணிற்கு அமீன் என்ற நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்நபர் திருமண இணையதளத்தில் சாராவின் புகைப்படத்தை பார்த்ததாகவும் நீங்கள் மிகவும் அழகாக இருப்பதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உங்களை மிகவும் பிடித்து இருப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து அவ்வப்போது தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

சாராவுக்கு பிடித்துப்போக சில தினங்களில் தனது பெற்றோரின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்க சாராவிடம் பணம் தந்து உதவும்படி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சாரா அமீன்  வங்கி கணக்கிற்கு 10 லட்சம் வரை மாற்றியுள்ளார். பணம் கைமாறியது முதல் சில தினங்களாக அமீன் பேசுவதை தவிர்க்க அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அழைப்பு நிராகரிக்கப்பட்டதால் அவர்க்கு  உண்மை புரிந்தது. அதாவது பெற்றோரின் மருத்துவ செலவுக்கு எனக்கூறி பத்து லட்சம் ரூபாய் அமீன் தன்னிடம் மோசடி செய்தது சாரா உணர்ந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதன் அடிப்படையில் காவல்துறையினர் அமீனை  தேடி வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |