உக்ரைனில் துப்பாக்கி முனையில் 20 பேரை பணய கைதிகளாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உக்ரைனில் கடந்த செவ்வாயன்று பஸ்சை வழிமறித்து ஆயுதமேந்திய ஒருவர் அதிலிருந்த 20 பேரையும் மிரட்டி பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கியோவ்க்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள லூட்ஸ் நகரில் நடந்தேறியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தை காவல்துறையினர் முற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை சார்பாக வெளியிட்ட அறிக்கையில், “சம்பந்தப்பட்ட மர்மநபர் வெடிபொருட்களை கையில் எடுத்துச் சென்றுள்ளார். அவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மிக விரைவாக அவரை நாங்கள் கைது செய்து விடுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் வெடி சத்தம் கேட்டதாக உக்ரைன் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கி முனையில் 20 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.