Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்.5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அதிரடி அறிவிப்பு

கடந்த 5 மாதங்களாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார்கள்.கொரோனா எப்போது குறையும் ? கல்வி நிலையங்களை எப்போது திறக்கலாம் ? என்று இன்னும் உறுதிப்படுத்த படாமல் இருக்கும் நிலையில், பல மாநிலங்கள் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஆந்திர மாநிலம் பள்ளிகள் திறப்பு குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது

ஆந்திராவில் செப்டம்பர் ஐந்தாம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |