கடந்த சில வாரங்களாக சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு சவால் அளிக்கிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் தமிழக அரசு அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சிக்கின்றது. அந்த வகையில் தற்போது வேலூரில் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மொத்த எண்ணிக்கை 4,494 அதிகரித்துள்ளது. அதேபோல செங்கல்பட்டில் 247 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 10536ஆக உயர்ந்துள்ளது. எனவே இரு மாவட்டங்களிலும் கொரோனா அதிகரிப்பதால் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தித்தான் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை போல பலரும் ஊரடங்கு வேண்டும் என்றே கருதுகின்றனர். அதே நேரத்தில் அரசு தான் முடிவு எடுக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.