Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தொற்று உறுதி… தனிமைப்படுத்தப்பட்ட பெண் நாடு விட்டு நாடு தப்பியோட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!

கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைத்து இருந்த இளம்பெண் ஒருவர் சிறப்பு விமானம் மூலம் துபாய் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கம் தீவிரமடைந்து வருவதால் நாட்டில்  வைரஸ் பரவும் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா முதல் மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக வைரஸ் தொற்றுள்ள பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலர் சுதந்திரமாக வெளியே சுற்றி திரியும் நிகழ்வும் நடந்து வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த பெண் ஒருவர் சுகாதார அதிகாரிகள் உள்பட யாருக்கும் தெரியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு சிறப்பு விமானத்தின் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்தினரோடு வாழ்ந்துவந்த 30 வயதுள்ள ஒரு பெண் புனேவில் தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பினுடைய பத்திரப்பதிவு  மாற்றதிற்காக இந்தியா வந்திருக்கிறார். அவர் மகராஷ்டிரா வந்த சில நாளிலேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமானங்களும் தடை செய்யப்பட்டது. இதனால் அந்த பெண் புனேவில் உள்ள புனவாலே என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருக்கிறார். இதனிடையில் அந்த குடியிருப்பில் இருந்தவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து,  அப்பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் லேசாக இருந்தால் அவரை  விட்டு தனிமையில் இருக்க சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண் உள்ளிட்ட பலர் வசித்து வந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கொரோனா கட்டுப்பட்டு பகுதியாக மாற்றப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருந்த பெண் மருந்து வாங்க கடைக்கு போவதாக கூறி வெளியே சென்றவர் திரும்பி வரவே இல்லை. இது பற்றி தகவலறிந்த சுகாதாரத்துறையினர் அப்பெண்ணின் உறவினர்களிடம் விசாரிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் மருந்து வாங்க போவதாக கூறி வெளியே சென்று அங்கிருந்து சிறப்பு விமானத்தில் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபாய் நகரில் உள்ள தன்னுடைய குடும்பத்தினரிடம் சென்றது  அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

மும்பையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் வரும் போது சார்ஜா விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டனர் என்றும், அப்போது தனக்கு கொரோனா இல்லை என்று உறுதியானதாகவும் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். கொரோனா விதிமுறைகளை மீறி வெளிநாட்டிற்கு தப்பி சென்ற 30 வயது பெண்ணின் மீது சுகாதார துறையினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரை கருத்தில் கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பெண் தப்பி செல்வதற்கு சிறப்பு விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து கொடுத்தவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு தனிமையில் வைக்கப்பட்ட பெண் விதிமுறைகளை மீறி தப்பி சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |