கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் ஒரு மாநிலமும் தப்பாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பல்வேறு அம்சங்களில் சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உலகத்திலேயே சிறப்பான சிகிச்சை கொடுக்கும் நாடாக இந்தியா இருந்து வருவதன் காரணமாக பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 11.9 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 28 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் இறப்பை ஒப்பிடும் போது, இந்தியா ஸ்பெயின் நாட்டை மிஞ்சி 7ஆம் இடத்திற்கு வந்துள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது