Categories
உலக செய்திகள்

ஐநா எச்சரிக்கை: மிக விரைவில் இந்தியாவிற்கு வெட்டுக்கிளிகள் வந்துவிடும்… உணவு பொருட்கள் நாசமாகும் அபாயம்…!!

இந்தியா பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் உணவு தானிய பாதுகாப்புக்கு பாலைவன வெட்டுக்கிளிகளால் ஆபத்து வருவதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராஜஸ்தான் மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தட்பவெப்பநிலை மாற்றத்துக்கும், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பிற்கும் தொடர்பு இருக்கின்றது என ஐ.நா சர்வதேச வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்துமாக் கடலில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தட்பவெட்ப நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. உலகம் வெப்பமயமாகி வருவதற்கு வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கமே ஒரு காரணம் என எச்சரித்துள்ளனர். அதே சமயத்தில் பாலைவன பகுதியில் ஏற்படும் மழைப்பொழிவு, புயல், சூறாவளி ஆகியவை பூச்சிகளின் இனப்பெருக்கம், வளர்ச்சி மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றிக்கு உதவியாக உள்ளன. அதுமட்டுமன்றி வெப்ப மண்டலங்களில் ஏற்படும் அதிக மழை, வெள்ளம் போன்றவையாலும் பூச்சிகள் பெருகுகின்றன. இந்நிகழ்வால் உணவு தானியங்கள் அதிக அளவில் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்ற 2019ஆம் ஆண்டின் இறுதியில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு காரணமாக சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில் 70 ஆயிரம் ஹெக்கர் பண்ணையில பயிர்களும், கென்யாவில் 2,400 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் மேய்ச்சல் நிலங்களும் அழிந்து போயின.இச்சூழ்நிலையில், வடக்கு சோமாலியா பகுதியிலிருந்து இந்திய பெருங்கடலின் வழியாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளின் இருபுறமும் வெட்டுக்கிளிகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காக மிக விரைவில் வந்து சேரும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது. இக்காரணத்தால் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் உணவு தானியங்கள் அனைத்தையும் பாதுகாக்க விரைவில் முயற்சி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உதவிக்கரம் நீட்ட கூடிய ஐ.நா., நேபாளம், இந்தியாவில் கன மழை காரணத்தால் 189 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி அசாமிலும் 40 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியா கோரிக்கை வைத்தாள் நாங்கள் உதவுவதற்கு தயாராக இருப்பதாக  ஐ.நா., கூறியிருக்கின்றது.

Categories

Tech |