புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, குடியுரிமை, சாதிச்சான்று, வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். தற்போது வருவாய் துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் காரணத்தினால் இதனை வழங்குவதில் சிரமமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை மூலம் பெறக்கூடிய எந்த சான்றிதழும் இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பழைய சான்றிதழ் இருந்தால் அதை வைத்துக்கொள்ளலாம்.
கொரோனா முடிந்து சகஜ நிலை திரும்பியதும், வருவாய் துறை அதிகாரிகள் அலுவலகங்கள் வந்த பின்னர் புதிய சான்றிதழ் வாங்கி இணைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். தொடர்ந்து சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இந்த கூட்டத்தொடர் விவாதத்தின்போது…. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின் துறையை தனியார் மயமாக்கம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தீர்மானமாக மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்மொழிந்தார். இதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.