உத்தரப் பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுள்ள சிறுமியை, அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால் பாதுகாப்புக்காக பக்கத்து வீட்டில் வசித்துவரும் கரீம் என்பவரிடம் நேற்று முன்தினம் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி விட்டுச் சென்றனர்.
ஆனால் கரீம் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதையடுத்து வீட்டுக்கு வந்த குடும்பத்தினரிடம் சிறுமி நடந்ததை கூறினார்.. அதனைதொடர்ந்து குடும்பத்தினர் கரீம் மீது போலீசில் புகார் செய்தனர்.. புகாரின் பேரில் போலீசார் கரீம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.