பிரபல நடிகர் ராம் சரணின் மனைவி தனது பிறந்தநாளை முன்னிட்டு பூங்காவில் இருந்த யானையை தத்து எடுத்து 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் பிரபலமான நடிகர் ராம்சரண் இவரது மனைவியானா உபாசனா தனது பிறந்த நாள் தினத்தன்று ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவிற்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள ராணி என்ற பெயருடைய யானையை தத்தெடுத்துள்ளார். இந்த யானைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உணவு மற்றும் பராமரிப்பு போன்ற செலவுக்காக ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக பூங்காவிற்கு வழங்கியுள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பூங்காவிற்கு பார்வையாளர்கள் வராத சூழ்நிலையால் பூங்காவின் வருமானம் பாதிக்கப்பட்டது .இந்நிலையில் உபாசனா நன்கொடை வழங்கியுள்ளதை அனைவரும் வரவேற்று புகழ்ந்து வருகின்றனர்.