Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த லாரி… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சோகம்..!!

தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட லாரி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் .

தருமபுரி மாவட்டம் சிவாடிப் பகுதியில் இருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கி சென்றது.. இந்த லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..

இந்த கோர விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் அதே லாரியில் சென்ற சேலம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் லாரி சென்றபோது, அதன் அருகே  பைக்கில் சென்ற நல்லம்பள்ளி மேல் பகுதியைச் சேர்ந்த சின்னவன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அரிய கவுண்டர் ஆகிய 2 பேரும் லாரி கவிழ்ந்ததில் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

Lorry met accident in Thoppur pass

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் தொப்பூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த விபத்து சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |