இந்தோனேஷியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா மேற்கு ஜாவா தாசிக்மலயா என்ற பகுதியில் ஹெனி நூரேனி என்ற 28 வயதுடைய பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறார். இச்சமயத்தில் கர்ப்பமான இவர் ஒரு மணி நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்நிகழ்வு பற்றி உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, வீட்டில் இருந்த சமயத்தில் எனது உடலில் முதலில் எத்தகைய மாற்றமும் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவை அறிந்தேன். இந்நிலையில் என்னை தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது வயிற்றில் எனக்கு அதிக பிடிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்ற பின்னர் குழந்தை பிறந்தது என கூறினார். அதே சமயத்தில் சென்ற 9 மாதங்களாக தவறாமல் மாதவிடாய் ஏற்பட்டது எனவும் குழந்தை பிறப்பதற்கு முன்னதாக கூட ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் சமூக ஊடகங்கள் அனைத்திலும் மிக வேகமாக பரவியது. இது குறித்து பண்டுங் சாதிகின் மருத்துவமனையின் மகப்பேறு நிபுணரான டாக்டர் ருஷ்வானா அன்வர் தனது கருத்தை கூறியுள்ளார். கர்ப்பமாக இருக்கக்கூடிய 25000 பெண்களின் ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடக்கலாம் என்றும் பெண்கள் சில தாங்கள் கர்ப்பமாக உள்ளதை அறிந்திருக்க மாட்டார்கள் எனவும் கூறினார். மேலும் ஹெனி நூரேனி எடையை குறைத்த காரணத்தால் குழந்தையுடன் தான் இருப்பதை அறிய முடியாமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் ஒரு பெண் கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் பிரசவம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. அதே சமயத்தில் இது ரகசிய கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வாக கூட இருந்திருக்கலாம் என தனது கருத்தைக் கூறியுள்ளார். தற்போது தாய் மகன் இருவருமே நலமாக இருக்கிறார்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.