Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி கணக்கை தொடங்குமா…… RCB VS KKR அணிகள் பலப்பரீட்சை….!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன

12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி இதுவரையில்  4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோற்று மண்ணை கவ்வியுள்ளது.

அந்த அணியில் பேட்டிங்கில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், ஹெட் மேயர் போன்ற வீரர்கள் இருந்தும் இன்னும் அவர்கள் சரியாக செயல்படாததால் வெற்றி கணக்கை தொடங்க முடியாமல் திணறி வருகிறது. பவுலிங்கில் சாஹல் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார். மற்ற வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.  சொந்த மண்ணில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் சில மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் அதிரடியாக ஆண்ட்ரே ரஸெல், நிதிஸ் ராணா, உத்தப்பா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஆண்ட்ரே ரஸெல், சுனில் நரேன் ஆகியோர்    மிரட்டுவதால் இன்றைய ஆட்டம்  விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |