Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்… காரில் வந்த மர்ம கும்பல்.. தலை தெறித்து ஓடிய கூட்டம்..!!

இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் பலர் காயப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் விழுந்தடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோவில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வாரம் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் இறுதி சடங்கிற்காக மக்கள் கூடியிருந்த நிலையில் திடீரென ஒரு காரில் வந்தவர்கள் அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அவர்களில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் காரில் வந்தவர்களை திருப்பி சுட்டுள்ளனர்.

இதை எதிர்பார்க்காதவர்கள் காரை திருப்பிக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். அச்சமயம் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு இடத்தில் மோதி விட  அவர்கள் காரை விட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 11 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுபோது  அவர் “அந்த இடமே போர்க்களம் போல் மாறிவிட்டது ” என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து வெளியாகி உள்ள வீடியோ பதிவு ஒன்றில் துப்பாக்கி சூட்டை கண்டதும் அங்குள்ள மக்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

Categories

Tech |