குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சு நாட்டின் grenoble நகரில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் பெற்றோர் விட்டு சாவியையும் போகும் பொழுது கொண்டு சென்றுள்ளார்கள். “எங்களிடம் சாவி இல்லை” என்று குழந்தைகள் சத்தமிட்டு அலறுவதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்திருக்கிறார்கள். அப்போது அந்த சிறுவர்களில் மூத்தவன் ஆன 10 வயது சிறுவன் தனது 3 வயது தங்கையை தூக்கி 40 அடி உயரத்திலிருந்து கீழேஉள்ளவர்களிடம் தூக்கிப் எறிந்துள்ளான். அவர்கள் அந்த சிறுமியை பிடித்து பத்திரமாக இறக்கி உள்ளனர். ஆனால் பயங்கரமாக கரும்புகை வந்துகொண்டருந்த அந்த வீட்டின் ஜன்னல் அருகே மூத்த சிறுவன் மட்டும் பயந்தபடி திகைத்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
கீழே நிற்பவர்கள் அந்த சிறுவனை கீழே குதிக்கும் படி சத்தமிட்டு கூறியுள்ளனர் அந்த சிறுவனும் கீழே குதித்த உடன் கீழே உள்ளவர்கள் அவனையும் பத்திரமாக பிடித்து கீழே இறங்கி உள்ளார்கள். பிள்ளைகள் பத்திரமாக எந்த காயமும் இன்றி மீட்கப்பட்ட நிலையில் அவர்களை தாங்கிப் பிடித்த Athoumani walid என்பவருக்கும் அருகில் நின்ற மற்றொருவருக்கும் கை எலும்பு முறிந்துவிட்டது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீ எப்படி பற்றியது? பெற்றோர்கள் ஏன் அந்த சிறுவர்களை தனியாக வீட்டில் விட்டு சென்றார்கள்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.