கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டரக்காரா (Kottarakara) என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனுஜித். இவருக்கு வயது 27 ஆகிறது. இவர் கடந்த ஜுலை 17ஆம் தேதி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.. பின்னர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அருகிலிருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அனுஜித்.. அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார் அனுஜித்..
இந்தசூழலில், அனுஜித்தின் குடும்பத்தார் அவரது இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு முன்வந்தனர்.. இதனையறிந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா, அனுஜித்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உறுப்பு தானம் செய்ய முன்வந்த அவருடைய உறவினர்களின் செயல் முன்மாதிரியானது என்று பாராட்டினார்.
பின்னர் முதல்வர் பினராய் விஜயனின் அறிவுறுத்தலின் பேரில், மாநில அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக அனுஜித்தின் உடலுறுப்புகள் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து உரிய நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.. அனுஜித் குடும்பத்தாரின் இந்த முன்மாதிரியான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.