சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு முடக்கத்தையும் பிறப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க தேனி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.