Categories
அரசியல்

தமிழகத்தில் ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு …!!

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் . மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு சாதகமான முடிவுகளாக அறிவித்து வருகின்றது. மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளும் அரசை நோக்கி வைக்கப்பட்டு வந்தன,  பொதுமுடக்காத்தால் மக்களுக்கு தேவையான சாதகமாக ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கையும் அரசு பிறப்பித்து வருகின்றது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரி செலுத்த ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகத்தில் பொதுமுடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகன வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |