கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை வசூலிக்க உத்தரவு பெற்றுக் கொண்டன. இதில் தனியார் சுய நிதி கல்லூரிகள் 3 தவணையாக கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளிகள் 40 சதவீத கட்டணங்களை முதலில் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்கள் வசூலிப்பதற்கு கட்டண நிர்ணய குழு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தனியார் பள்ளிகள் தங்களின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய ஜூலை 26ம் தேதிக்குள் ( நாளையொடு ) விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் காலக்கெடு நீட்டிக்கப்பட்ட மாட்டாது என கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது. மேலும் 2019 -20ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அளிக்கும் போது, ஒரு ஆவணம் தவறினாலும் விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியாது என கூறியுள்ளது.