நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று பரவி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து கொண்டிருக்கின்றது. உலகில் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் ஒரு மாநிலம் கூட தப்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தை எட்டி வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொடுக்கின்றது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 12 லட்சத்தை கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா, ஒடிஷா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், அருணாச்சல பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை பதிவாக அளவாக கொரோனா உறுதி செய்யப்பட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாடு முழுவதும் உயிரிழப்பு 30ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் 8 லட்சத்தை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. இருந்தாலும் கொரோனா பரவல் புதிய உச்சம் பெற்றது மத்திய அரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.