சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்கும் சிம்மராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவார் இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும்.
மகம், பூரம், உத்திரம், முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படுகிறார்கள் சிம்மராசி குருப்பார்வை ராசியாகும் ராசிக்கு பகலில் தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம், ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசியாக அமைக்கின்றன. உடலமைப்பு சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்லச் செல்ல உடல் பருமனாகவும் பருமனேகேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும், கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும் பொழுது கைகளையும் கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர் என்றாலும் அநாவசியமாக கோபப்படமாட்டார்கள். அழகான கண் இமைகள் இருக்கும் கண்களை கொண்டே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்கள். குண அமைப்பு சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும், நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டிவைக்கும் அஞ்சாநெஞ்சம் இருக்கும்.
அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் உடையவர்கள், சூதுவாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். முகசுத்திக்கு அடிமையாக என்பதைப் புரிந்துகொள்ளும் உடனிருப்பவர்கள் அவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால்பிறர் பலிச்சொல்லுக்கு செவி சாய்க்காமல் தனது விடா முயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்கள் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட முடியாது வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைத்த பின்னர்தான் நிம்மதியடைவார்கள். தனக்கு நிகரில்லாதவரிடம் பழகுவதை தவிர்ப்பார்கள்.
வாழ்க்கைக்கு பல தோல்விகளைக் கண்டாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர் ஆதலால் தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். மற்றவர்கள் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி விடுவார்கள். மணவாழ்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை சொந்தத்தில் அமையுமா அந்நியத்தில் அமைந்தாலும் மன வேற்றுமைகள் உடன் தான் வாழ்க்கை நடத்த முடியும். அவர்களின் திறமை சாமர்த்தியம் போன்றவற்றால் எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். கோபப்பட்டாலும் தான் செய்த தவறு எனத் தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்க்கும் மனப்பான்மை உடையவர்கள். அடக்கியாளும் குணமும் சந்தேக மனப்பான்மையும் கொண்டவர்கள்.