சீன தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்ட சில மணி நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டது அந்நாட்டின் மீது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
கொரோனா பாதிப்பால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகம் சர்வதேச சட்ட விதியினை மீறிய குற்றத்திற்காக அத்தகைய தூதரகத்தை உடனே மூட வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தகைய முடிவை மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த இயலாத நடவடிக்கை என்று சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா எத்தகைய கருத்தும் கூறவில்லை. அமெரிக்கா சீனா தூதுரகத்தை மூட உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்திலேயே ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற தூதரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை வேகமாக அடித்து தீயை அணைத்தார்கள். இவ்விபத்தில் சீன தூதரக பணியாளர்கள் எவருக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை. சீனா தங்களின் தூதரகத்தை மூடவதற்கு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்த சில மணித்துளிகளில் இத்தகைய தீ விபத்து ஏற்பட்டது என்பதால் பல சந்தேகங்களை தூண்டுகின்றது.