தமிழகத்தில் இன்னும் ஒன்பது, பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்கான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு திரை பிரபலங்களை தனது கட்சியில் இணைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான பிரமீட் நடராஜன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதன்பின் எல்.முருகன் பேசுகையில், கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு, ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு ? ரஜினி சரத்குமாரை தவிர மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.