வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவரது மனைவி கவிதா.. செந்தில்குமார் தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.. இவரது மனைவி கவிதா வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்று இரவு சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஈசாக் என்பவர் சரியாக கவனிக்காமல் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரை பின்னால் எடுக்கும் போது, காரின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது எதிர்பாராத விதமாக ஏறியது.. இதில், சாரா உட்பட 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.. குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு, சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி சாரா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுமி தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு போலீசார் காரை பறிமுதல் செய்து காரை ஒட்டிய அதே பகுதியைச் சேர்ந்த ஈசாக் என்பவரை அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கார் ஏறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.