கொரோனா பொதுமுடக்க ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றன. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு எப்போது கொரோனா முடியும் ? எப்போது கல்வி நிலையங்களில் நாம் பாடம் பயிலலாம் ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் பள்ளி மாணவர்களுக்கான படிப்பு சார்ந்த ஒவ்வொரு விஷயங்களையும் தமிழக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்பிக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக 14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் மாநிலம் தமிழகம்தான். பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.