ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்குமாறும் சபாநாயகருக்கு மாநில ஐ-கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வர இருக்கின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார்.
சபாநாயகரை கட்டுப்படுத்துவது நீதிமன்றத்தின் பணி கிடையாது, எனவே நீதிமன்ற அதனை ரத்து செய்ய வேண்டும், 24 ஆம் தேதி வரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்குகளை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விசாரிப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை எனவே வரும் 24ம் தேதி இது சம்பந்தமான வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உத்தரவிடுங்கள் என சொல்லி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவசர வழக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் வாதம் பிரதிவாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், மூன்று நாட்கள் கூட உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாதா ? என சபாநாயகருக்கு கேள்வி எழுப்பி அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். வரும் 24ம் தேதி திட்டமிட்டபடி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கலாம் உத்தரவினை வழங்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் நாளை திட்டமிட்டபடி சச்சின் பைலட் உள்ளிட்டோர் வழக்கில் தீர்ப்பு வழங்கப் படுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.