விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு நேற்று 444 எண்ணிக்கையை கூடுதலாக சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆச்சுன்னா அது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியாதான் இருக்கும். இது மாதிரியான கொலைபாதக ஆட்சியை இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை, இனியும் பார்க்க முடியாது. மூணு நாளில் கொரோனா ஒழிஞ்சுடும், பத்து நாளில் கொரோனாவை அழிச்சுடுவேன்னு பொய் சவால்களை விட்டு வந்த பழனிச்சாமி ஆட்சி யில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3144 ஆகிவிட்டது. நேற்று வரைக்கும் 2,700 பேர் தான் இறந்து இருப்பதாக அரசாங்கம் சொல்லிச்சி. ஆனால் ஒரே நாளில் 3144 எப்படி ஆனது ? இதுவரைக்கும் மறச்சி வெச்ச மரணங்களை இனியும் மறைக்க முடியாமல், வெளியில் சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க.
தினமும் பொய் சொல்லி இருக்கீங்க:
மரணமடைந்தவர் உடலை எவ்வளவு தான் மறைச்சாலும், ஒரு வாரத்துல வெளியே தெரிய ஆரம்பிச்சுடும்னு சொல்லுவாங்க. மறைக்கிறது அரசாங்கமாக இருந்ததுனால ரெண்டு மாசம் வரைக்கும் மறைச்சு வச்சு இருக்காங்க. நேற்றைய தினம் இந்த அரசாங்கம் சொன்ன ஒரு விஷயத்தை என்ன காரணம் சொன்னாலும் நியாயப்படுத்தவே முடியாது. அவ்வளவு கொடுமையான விஷயம் அது. மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் இறந்தவரை எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டு விட்டது, அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படின்னா…. என்ன அர்த்தம் ? மார்ச் 1ஆம் தேதியிலிருந்து இன்றைக்கு வரைக்கும் தினமும் பொய் சொல்லிட்டு வந்து இருக்காங்க… அது தான் உண்மை.
சாவை சாதனையாக சொன்ன முதல் ஆள்:
மரணத்தை இந்த அரசாங்கம் மறைக்குதுனு ஜூன் 15ஆம் தேதி அன்னைக்கே நான் சொன்னேன். கொரோனாவால் இறந்தவர் மரணம் மறைக்கப்பட்டது என்று ஊடகங்கள் ஜூன் முதல் வாரமே மெல்ல எழுத ஆரம்பித்தன. இதற்கு உரிய விளக்கத்தை அரசாங்கம் சொல்லனும்னு நானும் கேட்டேன். நான் அரசியல் பண்றேன்னு சொல்லி, பதில் சொல்ல மறுத்தார்கள். தமிழ்நாட்டில்தான் மரண விகிதம் குறைவு என்று தன்னுடைய சாதனை மாதிரி… முதலமைச்சர் சொன்னாரு. சாவை சாதனையாக சொன்ன முதல் ஆள் இவராகத்தான் இருப்பார். இவர் சொல்வது பொய் என்று அரசாங்கம் சொன்ன புள்ளி விவரத்தின் மூலமாகவே தெரியவந்தது.
இதைவிட கேவலம் என்ன ?
சென்னையில் மொத்தம் 460 பேர் இறந்ததாக ஜூன் 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொன்னது. ஆனால் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை 224 பேர் தான் இதுவரையில சென்னையில் இறந்ததாக சொன்னது. அப்படின்னா…. மரணமடைந்த 236 பேர் யார் ? அவங்க என்ன நோயால் இறந்தார்கள் என்று நான் கேட்டேன்… மக்கள் நல்வாழ்வுத்துறையும, சென்னை மாநகராட்சியும் தமிழக அரசாங்கத்தினுடைய இரண்டு பிரிவுகள் தான். அவர்களே ரெண்டு விதமா சொன்னாங்க. இதைவிட கேவலம் என்ன இருக்க முடியும். 236 உயிர்களின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது என்று நான் அப்போதே குற்றம் சாட்டினேன். இது ஒன்னும் பெரிய பிரச்சினையில்ல, நடைமுறைப் பிரச்சனை தான் என்று அன்று சுகாதார துறை செயலாளராக இருந்தவர்கள் சொன்னாங்க….
மகா யோக்கியர்:
236 பேர் மரணத்தை நடைமுறைப் பிரச்சனை தான் என்று அந்த அதிகாரிகள் சொன்னார். இதைப்பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் கேட்டபோது, இறப்பு தகவலை மறக்கமுடியாது. பத்திரிக்கைகள் உட்பட அனைவரும் பாத்துக்கிட்டு இருக்கீங்க என்று மகா யோக்கியரை போல சொன்னார். எந்த தவறும் நடக்கவில்லை என்று முதலமைச்சர் சொன்னார். ஆனால் இந்த விவகாரம் மத்திய அரசு வரைக்கும் போய் அங்கிருந்து விசாரணை நடத்தியதாக சொன்னாங்க. அதனால இதுபற்றி விசாரணை குழு அமைப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சொன்னார். அப்படி சொன்னதற்காகவே… அவரை தூக்கி அடிச்சாரு முதலமைச்சர், பீலா ராஜேஷ் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த வரைக்கும் 236 மரணங்கள் தான் மறைக்கப்பட்டது என்று சொன்னார்கள்.
அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்:
இப்போ ராதாகிருஷ்ணன் வந்த பிறகு 444 மரணங்கள் இதுவரை மறைக்கப்பட்டிருந்தது சொல்றாங்க. முதலமைச்சருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு பயந்துட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்கள் மறைந்துள்ளார்கள். பரிசோதனை பண்ணாத… கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையாக சொல்லாத… மரணத்தை காட்டாத…. என்று முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அதுதான் இந்த அரசாங்கத்தில் நடக்குது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி https://t.co/mw9jf6ZIEn
— M.K.Stalin (@mkstalin) July 23, 2020