சீன தூதரகத்தை அமெரிக்கா மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா பரிசீலனை செய்து வருகிறது.
அமெரிக்காவில் அமைந்திருக்கும் சீன தூதரகத்தை மூடுவதற்கு ட்ரம்ப் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்த தொடர்ந்து சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு ஆவணங்கள் அழிந்து போனதாக தகவல்கள் வெளியாகியது. அதோடு ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க விவகாரங்களை உளவு பார்ப்பதாகவும் அமெரிக்க வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.சீனத் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களும் தூதரக அதிகாரிகளால் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தூதரகத்தினை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் தூதரகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் காகிதங்கள் எரித்த குற்றத்திற்காக மேலும் பல தூதரகங்கள் மூடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க விவகாரங்கள் அனைத்தையும் உளவு பார்க்க முயற்சி மேற்கொண்டதாகவும் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை தட்டிப் பறிக்க முயற்சித்ததாகவும் குற்றம் கூறியுள்ளது.தூதரகத்தை மூடும் இத்தகைய உத்தரவால், இரு நாட்டிற்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் பனிப்போர் மேலும் வலுவடைந்து மிகப் பெரிய விரிசல் அடையும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. உத்தரவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, உகானில் இருக்கின்ற அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு பரிசீலனை செய்துள்ளது.
.