பாகிஸ்தானில் பெண் கொடுக்க தந்தை மறுத்ததால் அப்பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் Mohammad Yousuf என்பவரும் அவரது மகள் Sadia என்ற 14 வயது சிறுமியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் Yousuf-இன் சகோதரர் Mohammad Yaqoob என்பவர் அச்சிறுமியை தன் மகனுக்கு பெண் கேட்ட நிலையில், பெண்ணை வேறொரு உறவினருக்கு திருமணம் செய்து தருவதாக உறுதி அளித்து விட்டதாக Yousuf கூறியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தன் மகனுக்கு பெண் கொடுக்காத காரணத்தால் ஆத்திரமுற்ற yoqoob அங்கேயே நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தார்.
பின்னர் அச்சிறுமி வீட்டிற்கு வருவதை கண்ட அவர், வீட்டிற்குள் சென்ற சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் கொழுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியே அங்கிருந்து தப்பித்துள்ளார் பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் காயங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக சிறுமி உயிரிழந்துவிட்டாள். இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் ஆதாரங்களை காவல்துறையினரிடம் மறைக்க முயற்சி மேற்கொண்டனர். விசாரணையின்போது குடும்பத்திலுள்ள அனைவரும் பல்வேறு விதத்தில் பதிலளித்த காரணத்தால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் முறைப்படி விசாரணை மேற்கொண்டபோது Yaqoob சிக்கினார். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது Yaqoob தனது தவறை ஒப்புக்கொண்டார்.