Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கொஞ்ச நாட்களை குறைத்துகோங்க… வேண்டுகோள் வைத்த கங்குலி…. மறுப்பு தெரிவித்த கிரிக்கெட் வாரியத்தின் பதில்….!!

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

 

 

இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்  தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும்.

எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்தார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி.இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைகால தலைமை செயல் அதிகாரியான நிக் ஹாக்லி வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தால் 14 நாட்களுக்கு அவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தும் விதி ஆஸ்திரேலியா அரசால் விதிக்கப்பட்டது.

அதனால் இந்திய கிரிக்கெட் அணியும் கட்டாயமாக இந்த விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்படும் நாட்களில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் தேவையான அனைத்து சிறப்பு வசதிகளும் இங்கு செய்து தரப்படும் இதற்கு தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் அடிலெய்டு மைதானத்தில் இருக்கின்ற ஓட்டலில் உள்ளது என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |