தனது வாழ்க்கையுடன் ஒப்பிட்டால் கொரோனா பெரும் பாதிப்பாக தெரியவில்லை என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
மனிஷா கொய்ராலா அவர்கள் தமிழில் மும்பை எக்ஸ்பிரஸ், பாபா, இந்தியன், முதல்வன், பம்பாய், போன்ற படங்களில் நடித்து வந்தவர். மேலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, படங்களிலும் கூட நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. இவர் சாம்ராட் தகால் என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு வருடத்திலேயே விவாகரத்து வாங்கிக்கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து சில வருடங்களில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பேட்டி அளித்துள்ளார். கொரோனா காரணமாக நாட்டில் வரும் பல சூழலைக் கண்டு கூட நான் அச்சப்பட வில்லை ஏனென்றால் மோசமான புயல்கள் எனது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளதால் அதனோடு ஒப்பிடுவதால் கொரோனா எனக்கு பெரும் பாதிப்பாக தெரியவில்லை வழக்கம்போல நான் அமைதியாகவே உள்ளேன்.
யோகா-தியானம் செய்து வருகிறேன். இயற்கையோடு பேசி வருகிறேன். எனது நேரத்தை செடிகளுடனும் பெற்றோர்களுடன் செலவழித்து வருகிறேன். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மும்பையில் பறவைகள் சத்தம் இப்போது தான் கேட்கின்றன. அதனால் இந்த அமைதியான சூழலை முன்பு கண்டதில்லை என்றும் திருமணம் செய்துகொள்ள மீண்டும் எண்ணம் வரவில்லை நோய் பாதிப்புக்கு பிறகு தனிமையிலும் என் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.