விக்ரமின் மகாவீர் கர்ணா திரைப்படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குனர் பதிலளித்துள்ளார்.
சரித்திர கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் மகாவீர்கர்ணன் இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கிவருகிறார் இதில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.இப்படம் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட இந்நிலையில் நடிகர் விக்ரம் வேறு பிற படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் திருவிதாங்கூர் சமஸ்தான சம்பவங்களை மையமாக வைத்து தர்மராஜா என்ற திரைப்படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த சூழ்நிலையில் சமூகவலைதளத்தில் மகாவீர் கர்ணன் திரைப்படம் கைவிடப்பட்டதாக தொடர்ந்து கருத்துக்கள் வெளியானது.இதுகுறித்து இயக்குனர் எஸ்.ஆர்.விமல் கூறுகையில் கடந்த வருடம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடிகர் விக்ரமின் அறிமுகக் காட்சிகள் எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டு விட்டது.எனவே படத்தின் டிரைலர் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடனே வெளியிடப்படும். நடிகர் விக்ரம் கோப்ரா,பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து முடித்த பிறகு மகாவீர் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கத் துவங்குவார். ஆகவே மகாவீர் கர்ணன் திரைப்படத்தை கைவிட்டதாக வெளியான அனைத்து தகவலும் பொய்யானது நாங்கள் படத்தை கைவிடவில்லை துடங்குவதற்க்காக சற்று காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார் .