மேஷ ராசி அன்பர்களே …! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எப்போதுமே நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். எதிலும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதான மாகத்தான் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வேலைப்பளுவால் உடல் கொஞ்சம் சோர்வடைதல், குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம் காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். எதையும் கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். கணவன் மனைவி எதையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பொறுமையாக இருங்கள் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு நல்ல படியாகவே நடந்தும் முடியும்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லை இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்