Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…குழப்பங்கள் அகலும்…தேவைகள் பூர்த்தியாகும்…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று தனவரவும் மனத்திற்கும் நிம்மதி ஏற்பட்டு மனம் மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள் வாகனம் வசதி வாய்ப்புகள் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருப்பவரின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். நிம்மதி பிறக்கும் நாளாக இருக்கும். மனைவிக்கிடையே அன்பு இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும். அது மட்டுமில்லாமல் நீங்கள் கேட்ட இடத்தில் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழிலை விரிவுபடுத்த எண்ணமும் தொன்றும்.

காதலர்களுக்கும் இன்று மகிழ்ச்சி கொள்ளும் நானாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |