கொரோனா ஊரடங்கு காலத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. எப்போது தேர்வுகள் நடைபெறும் என்று காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மகிழ்ச்சி அளிக்கும் விதமான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
JEE மெயில் தேர்வுடன் 12-ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது. அதாவது என்ஐடி, மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு தேர்ச்சியுடன் பிளஸ்-2 தேர்ச்சி போதும் என தெரிவித்துள்ளது. ஐஐடியில் சேர JEE Advanced தேர்வில் ஏற்கனவே இதே சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.