தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவனுக்கு நேற்று தொடர்ந்து காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து மாநகராட்சி சார்பில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல அவரின் மகள், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவரை சேர்த்து தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கிறது.