Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் -பெரும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 25 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது.

இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக  இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி 3,232ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 49பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,336 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 90,900ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 70.89 % குணமடைந்துள்ளது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இதனால் சென்னையில் 13,569பேரும், தமிழகம் முழுவதும் 52,939பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 25மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை – 1336

விருதுநகர் – 480

திருவள்ளூர் – 416

தூத்துக்குடி – 415

செங்கல்பட்டு – 375

காஞ்சிபுரம் – 330

மதுரை – 274

நெல்லை-246

கோவை -238

ராணிப்பேட்டை – 214

Categories

Tech |