கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்தால் ஒரு லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஜார்கண்ட் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 45 ஆயிரத்துக்கும் மேலாநாவர்களுக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,129 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,82,66 பேர் வீடு திரும்பிய நிலையில் 4,26,567 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 29,771 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதிப்புகளை தடுக்கும் வகையில் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு ரூ 1 லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீதும் இந்த சட்டம் பாயும் என எச்சரிக்கப்படுகிறது.