குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜோ பிடன் அதிபர் டிரம்பை இன வெறி பிடித்தவர் என்று ஒரு காணொளி மூலம் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது இதில் அரசு சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறக்கப்பட்டார். கொரோனா பரவலை பற்றி ஏதும் பொருட்படுத்தாமல் இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் காணொளி மற்றும் நேரடியாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஷிங்டன் சேவைத்துறை ஊழியர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் காணொளி மூலம் பங்கேற்று பேசியதாவது, ” அமெரிக்காவில் இன வெறி பிடித்தவர்கள் பலரும் அதிபராக வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட யாரும் வெற்றி பெறுவதாக இல்லை. இன வெறி பிடித்தவர்களில் முதல் முறையாக அதிபரானவர் டிரம்ப் மட்டும்தான். அவர் அமெரிக்காவில் இன வெறியை பரப்பி மதத்தின் அடிப்படையில் அவர்கள் சார்ந்திருக்கும் நாடு, எங்கிருந்து வந்தவர்கள் என்பதை பார்த்து பாரபட்சத்துடன் நடத்துகிறார். இதனை அடுத்து இதுவரை இருந்த எந்த அமெரிக்க அதிபர்களும் இதுபோன்ற மக்களை இன வெறியுடன் நடத்தியதில்லை, பார்த்ததுமில்லை. நான் அதிபரானால் முதல் 100 நாட்களில் இன வெறியை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.