கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்வளம் முழுவதும் சிதைந்துள்ளது. அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பொருளாதாரம் முழுவதும் சரிந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முயற்சியாக பல்வேறு விதமான அதிரடி உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
பொதுமுடக்கம் காரணமாக பல தொழில்களில் ஈடுபட்டவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆட்டோ டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால்வண்டி முகவர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. தமிழக அரசின் பால் மற்றும் இதர பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.