Categories
சினிமா

புகைப்படத்தால் சிக்கிய விமல் மற்றும் சூரி…. அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்….!!

நடிகர்கள் விமல் மற்றும் சூரிக்கு தடை செய்யப்பட்ட வனப் பகுதியில் நுழைந்து மீன் பிடித்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மூன்று மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி இருவரும் ஒன்றாக இணைந்து கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன் பிடிப்பது போன்ற புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர் நடத்திய  விசாரணையில், சென்ற 17-ஆம் தேதி ஏரியில் நடிகர்கள் இருவரும் மீன் பிடித்தது தெரியவந்தது.

இத்தகைய குற்றத்திற்காக விமல் மற்றும் சூரி இருவருக்கும் வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அது மட்டுமன்றி தடை செய்யப்பட்டுள்ள வனப்பகுதியில் இனி எவரும் அத்துமீறி நுழைய கூடாது என்று நடிகர்கள் இருவருக்கும் வனத்துறை சரக கண்காணிப்பாளர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |