Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னால் செலவு வரக்கூடாது… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து விட்டு… தோட்டத்தில் சடலமாக கிடந்த இளைஞர்… கதறும் குடும்பத்தினர்..!!

வீட்டில் கடுமையாக நடந்து கொண்டதால் தனக்குப் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஐடிஐ மாணவன் சதீஷ்குமார். கடந்த 18 ஆம் தேதி ஏதோ பிரச்சனையின் காரணமாக சதிஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மிகவும் கடுமையாக திட்டி அடித்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்த அவர் தன்னால் யாருக்கும் செலவு வந்துவிடக்கூடாது என்று அவரது படத்தை வைத்து அவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

சதீஷ்குமார் நண்பர்கள் இதனை உடனடியாக  குடும்பத்தினரிடம் தெரிவிக்க அதிர்ச்சியடைந்து போயினர் பின்னர் சதீஷ்குமாரை பல இடங்களில் தேடிய குடும்பத்தினருக்கு ஏமாற்றமே மிச்சமாக கிடைத்தது. மறுநாள் மழவராயன்பட்டி கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் சதீஷ்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதை அறிந்து அங்கு சென்ற குடும்பத்தினர் சதீஷ்குமார் உடலை கண்டு கதறி உள்ளனர். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்த சதீஷ்குமாரின் சகோதரர் அப்பா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |