Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 30 ஆடுகள்… கடித்து குதறிய குரங்கு கூட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

30 ஆட்டுக்குட்டிகளை குரங்கு கூட்டம் கொடூரமாக கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அங்கு இருந்த குரங்கு கூட்டம் ஒன்று சுமார் 30 ஆட்டுக்குட்டிகளை கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவர் 30 ஆட்டுக்குட்டிகளையும் கொட்டகையில் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். அச்சமயம் அப்பகுதிக்கு வந்த குரங்கு கூட்டம் ஆடுகளை விடப்பட்டிருந்த கொட்டகையை தாக்கத் தொடங்கியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குரங்குகளை விரட்ட முயற்சி செய்தும் முடியாமல் போனது. வீட்டு கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் குரங்குகளால் வீட்டின் உள்ளே நுழைய முடியவில்லை.

இந்நிலையில் 30 ஆடுகளை குரங்குகள் கொடூரமாக கடித்து கொன்றது. குரங்குகளின் அச்சுறுத்தலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சூரியபெட் இருந்து வருகிறது. அங்கிருக்கும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை திருடுவது, பொது மக்களை அச்சுறுத்துவது, சில சமயங்களில் கடிப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது சில கிராமங்களில் கடைக்காரர்கள் குரங்குகளிடமிருந்து தப்பிக்க பெரிய புலி பொம்மைகளை வைத்திருக்கின்றனர்.

Categories

Tech |