கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறால் காவல் நிலையம் முன்பு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அருகே தேங்காய் மற்றும் பழக்கடை நடத்தி வருகின்றார். தற்போது கோயில்கள் மூடப் பட்டிருப்பதால் இவரது கடையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கமணியிடம் மாகாளிக்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தானும் அதே பகுதியில் கடை வைக்கப்போவதாக கூறி அடிக்கடி போதையில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் விக்னேஷ் தங்கமணியின் கடையை சேது படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் தங்க புகார் கொடுக்க சென்றபோது காவல் நிலையம் எதிரே வைத்து விக்னேஷ் தங்கமணியை வழிமறித்து தகராறு ஈடுபட்டார். இதனால் கோபம்கொண்ட தங்கமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விக்னேஷை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழ, இதை அறிந்த காவல்துறையினர் விக்னேஷை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சமயபுரம் காவல் துறையினர் தங்கமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.