கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு முன்மாதிரியான நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாய்ந்த ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோ , டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் ஆவின் நிறுவனம் அவர்களை நடமாடும் பால்வண்டி முகவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ஆவின் தலைமை அலுவலகத்தில் ரூபாய் 1000 வைப்புத்தொகை செலுத்தி பால்வண்டி முகவர்கள் ஆகலாம். மாவட்டத்தில் உள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகத்திலும் ரூபாய் 1000 செலுத்தி முகவர்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.