நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எப்போது உயர்கல்விக்கு செல்லலாம் ? என்று காத்திருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியானது.
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 9 மணி முதல் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று நேற்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.