Categories
தேசிய செய்திகள்

“சாலைகளை தகர்க்க வேண்டும்” மறுப்பு தெரிவித்த நக்சலைட்டுகள்… கழுத்தை அறுத்து கொலை…!!

சாலையை தகர்க்க நக்சலைட்டுகள்  மறுப்பு தெரிவித்ததால் அவர்களை  கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சத்திஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா என்ற மாவட்டத்தில் உள்ள பொடாலி கிராமத்தில் அமைக்கவிருக்கும் சாலையை அளிக்க வேண்டும் என நக்சலைட்டுகள் இருவருக்கு அவர்களின் கூட்டாளிகள் ஆணையிட்டனர். ஆனால் அதை செய்ய இருவரும் மறுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் கூட்டாளிகள் இருவரையும் கொலை செய்தனர். இச்சம்பவத்தின் போது அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த கிராம மக்கள் சிலருக்கு அடி உதை விழுந்தது. இதனைத் தொடர்ந்து தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா விசாரணை மேற்கொண்டார். அதே சமயத்தில் கொலை செய்யப்பட்ட இரு நபர்கள் பஜ்ரங் வெட்டி, டிடோ மண்டாவி ஆகிய இருவரும் பொடாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் இவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எனவும் அந்த இயக்கத்தில் உள்ள தலைவர்கள் பொடாலி கிராமத்தில் அமைக்க உள்ள சாலையை அளிக்க ஆணையிட்ட போது நக்சலைட்டுகளும் அதனை செய்ய மறுத்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரு நக்சலைட்டுகள் அதனை செய்ய மறுத்த காரணம் என்னவென்றால், இருவரும் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களின் கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதிக்கு அந்த சாலை உதவியாக இருக்கும் என்ற காரணத்தால் அச்செயலை செய்ய மறுத்துள்ளனர்.
இதனால் இருவரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர். அச்சமயத்தில் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த கிராம மக்களுக்கும் அடி விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட இரு நக்சலைட்டுகள் உடலும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் காயமடைந்த கிராம மக்கள் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |