Categories
உலக செய்திகள்

முகக் கவசம் அணியாதவர்கள் இதை செய்தாக வேண்டும்…. நூதன முறையில் தண்டனை – வடகொரியா அதிரடி

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், மூன்று மாத கடின உழைப்பு தண்டனையும் வட கொரிய அரசு விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன நாட்டில் சென்ற டிசம்பர் மாதத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயானது தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 1.47 கோடி மக்களின் உடல்களில் இத்தகைய வைரஸ் புகுந்து உள்ளது. அது மட்டுமன்றி 6 லட்சத்திற்கும் மேலான உயிர்களையும் பறித்துள்ளது. இதனால் பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவர்கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என தற்போது வரை உறுதியாக கூறி வருகின்றனர். இதுகுறித்து வல்லுநர்கள் கூறும் போது, சீனாவிற்கு அருகில் உள்ள நாடு வடகொரியா என்பதால் கண்டிப்பாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் வட கொரியர்கள் பொருளாதார தடையில் இருக்கும் நிலையில் சீனா அதற்கு ஆதரவு அளிப்பதால் கொரோனா உண்மையை அந்நாடு முழுவதுமாக மறைத்து வருகிறது என கூறியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் வடகொரியாவில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதமும் மூன்று மாத கடின உழைப்பு தண்டனையும் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க மாணவர்கள் குழுவானது ரோந்து பணியில் படுவார்கள் எனவும் அதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் அறியப்படுகிறது. மேலும் முகக் கவசம் அணியாமல் யாராவது வெளியே நடமாடினால் எத்தகைய அனுதாபமும் இன்றி அவர்களுக்கு மூன்று மாத கடின உழைப்பு தண்டனையாக வழங்கப்படும் என்று வடகொரியா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இத்தகைய விதி முறையானது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நோக்கத்தைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளின் கீழ் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |