Categories
தேசிய செய்திகள்

சாலையோரத்தில்… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்… பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்த பெண்… தொடரும் அதிர்ச்சி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சாலை ஓரத்தில் மீட்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருவது, மிகவும் வேதனையளிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அம்மாநிலத்தின் ஹரோவா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், சாலையோரத்தில்  இருந்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது, அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆஸ்பத்திரியில்  தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.இதற்கிடையே, உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நீதி வேண்டும் என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் தான் மேற்கு வங்கத்தின் சோனார்பூரில், இதேபோன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.. மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டது என்றும், இதன் காரணமாக மாநிலத்தில் பயங்கரவாத சூழல் நிலவியுள்ளது என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

Categories

Tech |