சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பால்துரை மற்றும் ஒரு காவலர் இரண்டு பேருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மூன்று தினங்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர் கடந்த 15ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி காரணமாக கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பால்துரைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த காவலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.